சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியர்களிடம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து ஆலோசிக்கவுள்ளார். வரும் செவ்வாய்க்கிழமை (டிச.22) அன்று அவர் ஆசிரியர்களுடன் ஆலோசனை செய்த பிறகு, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ.,யில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாக மட்டுமே நடத்தப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ அலுவலர்கள் அறிவித்த நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, பொதுத்தேர்வை மே மாதம் வரை தள்ளிவைத்து, குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தவேண்டும் என ட்விட்டர் மூலம் அமைச்சர் பொக்ரியாலிடம் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு; முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்