ETV Bharat / bharat

புதுச்சேரி அரசு அலுவலகங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை!

புதுச்சேரி: சார்பதிவாளர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அலுவலர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

cbi raid in pudhucherry govt offices
author img

By

Published : Aug 31, 2019, 8:31 AM IST

புதுச்சேரி சாரம் பகுதியில் அமைந்துள்ள பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் சிபிஐ அலுவலர்கள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். எதிர்பாராத இந்த சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

புதுச்சேரியில், ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறந்து வருவதால் கடந்த சில மாதங்களாக புதுச்சேரி பதிவாளர் அலுவலகத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற திடீர் சோதனை, ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரசு அலுவலகங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை

சார்பதிவாளர் அலுவலகத்தை தொடர்ந்து மாவட்ட பதிவாளர் அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை, உழவர்கரை நகராட்சி அலுவலகம், புதுச்சேரி நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

Intro:புதுச்சேரியில் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் இதனால் அங்கு அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Body:புதுச்சேரி சாரம் பகுதியில் அமைந்துள்ளது பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகம் இந்த அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மாலை நான்கு முப்பது மணியிலிருந்து திடீர் சோதனை நடத்தி வருகின்றனர் எதிர்பாராத இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் இங்கு மாவட்ட பதிவாளர் தட்சிணாமூர்த்தி என்பவரும் சார் பதிவாளர் ஆக சிவசாமி என்பவரும் பணிபுரிந்து வருகின்றார்கள்

புதுச்சேரியில் பெருமளவில் பதிவாளர் அலுவலகத்தில் பணப்புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனையால் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் இடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த சிபிஐ அதிகாரிகள் சோதனை புதுச்சேரியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம் ஜிப்மர் மருத்துவமனை ,உழவர்கரை நகராட்சி அலுவலகம் ,புதுச்சேரி நகராட்சி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஏழு கொம்யூன் பஞ்சாயத்துக்கள் உட்பட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி வருகின்றனர் நாளை 31ம் தேதி என்பதால் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளவர்கள் வரி பாக்கி ஏதும் வைத்து உள்ளனரா என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன

Conclusion:புதுச்சேரியில் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் இதனால் அங்கு அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.