உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்தார் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை உத்தரப் பிரதேச அரசு கைது செய்து விசாரித்துவந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானார். அவரின் இரு அத்தைகள் அந்த விபத்தில் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குல்தீப் சிங்குக்கு எதிராக எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், உன்னாவ் வழக்கு தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி விபத்தில் தொடர்புடைய லக்னோ, உன்னாவ், பண்டா உள்ளிட்ட17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்திவருகிறது.