இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஊரடங்கு காலத்தில் கலால் சட்ட விதிகள் மீறல் தொடர்பாக மொத்தம் 236 வழக்குகள் பதிவாகின.
இந்த வழக்குகளின் கீழ் சில கலால், காவல் துறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கலால் துறை துணை ஆணையர் பதவியிலிருந்தவர் மாற்றப்பட்டு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்று வருவதால் அரசுக்கு அதிகளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் நடந்த மது விற்பனை தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இவ்வழக்கில் ஏதேனும் தகவல் இருந்தால் சிபிஐக்கு தெரிவிக்கலாம்.
மேலும், மது விற்பனை குறித்து ஆளுநர் அலுவலகத் தலைமை குறை கேட்கும் அலுவலர் பாஸ்கரனிடம், 95005 60001 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார்தாரர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்