ராஞ்சி: ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் நிறுவனரும், பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிக்கி, நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் தும்கா கருவூல ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ்வுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற வழக்குகளில் பிணை பெற்றாலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தும்கா கருவூல ஊழல் வழக்கில் தனக்கு பிணை அளிக்கும்படி லாலு பிரசாத் யாதவ்வின் தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தது.
லாலு பிரசாத் யாதவ் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். அப்போது சிபிஐ தரப்பில் லாலு பிரசாத் யாதவ்வின் பிணைக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ தரப்பு வழக்குரைஞர் கூறுகையில், “தும்கா கருவூல ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் லாலு பிரசாத் யாதவ் ஒருநாள் கூட சிறை தண்டனையை அனுபவிக்கவில்லை” என்றார்.
லாலு பிரசாத் யாதவ் நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க: “10ஆம் வகுப்பை தாண்டாத லாலு மகன்களின் தேர்ச்சிக்கு உதவுகிறோம்”- பிகார் பாஜக!