டெல்லி: ராஜஸ்தானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு அறிவிக்கையை நிறைவேற்றியுள்ளது. ஜூலை 19ஆம் தேதியிட்ட இந்த அறிவிக்கையில், மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் வருகின்றனர்.
இவர்கள் மீது ஏதேனும் குற்றஞ்சாட்டுகள் எழும்பட்சத்தில் அது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரினால், மாநில அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே சிபிஐ விசாரணை மேற்கொள்ள முடியும். முன்னதாக, 1990 ஆம் ஆண்டில், மாநிலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக விசாரணை நடத்த சிபிஐக்கு பொது ஒப்புதல் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை மாநில அரசு நிராகரித்தது.
டெல்லி காவல்துறை சிறப்பு ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் சிபிஐ அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கைகளில் உள்ளது. ஆகவே மாநில பிராந்தியத்தில் ஊழல் வழக்குகளை பதிவுசெய்து விசாரிக்க பல்வேறு மாநில அரசாங்கங்களின் ஒப்புதல் தேவை.
அந்த வகையில், தற்போது எந்தவொரு மத்திய அரசு ஊழியருக்கும் எதிராக தகவல்கள் அல்லது புகார்கள் வந்தாலும், அந்த நிறுவனம் மாநில அரசுக்கு இதுதொடர்பாக அனுமதி கோர வேண்டும். மாநில அரசு, அனுமதி அளித்தால் மட்டுமே சிபிஐ வழக்கை பதிவு செய்ய முடியும்.
ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2018ஆம் ஆண்டு நடந்துள்ளது.
இதையும் படிங்க... மோடி பிரதமரான பின்பு இருதரப்பு உறவுகள் மோசமடைந்தது ஏன்? அசோக் கெலாட் கேள்வி