ETV Bharat / bharat

குதிரை பேர ஆடியோ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரும் அபிஷேக் மனு சிங்வி! - ராஜஸ்தான் அரசியல் குழப்பம்

டெல்லி: ராஜஸ்தான் குதிரை பேர ஆடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணையால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார்.

Abhishek Manu  Singhvi
Abhishek Manu Singhvi
author img

By

Published : Jul 19, 2020, 1:53 PM IST

மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் நீண்ட நாள்களாக நிலவிவந்த பனிப்போர், சில நாள்களுக்கு முன் கடும் மோதலாக வெடித்தது.

இதனால், சச்சின் பைலட் மாநிலத்தின் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும், துணை முதலமைச்சர் பதவியிலிருந்தும் கழட்டிவிடப்பட்டார். இதையடுத்து, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டார்.

மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை வைத்து ஆட்சியைக் கவிழ்த்த பாஜக, தற்போது பைலட் மூலம் ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் தீட்டிவருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிவருகிறது. இது ஒருபுறமிருக்க, பாஜக இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. பைலட்டும் தன்னை பாஜக இயக்கவில்லை என்று கூறினார்.

இச்சூழலில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், பைலட்டின் ஆதரவாளர்களான பன்பர் லால் சர்மா, சஞ்சய் ஜெயின் ஆகியோருடன் எம்எல்ஏக்களை பாஜக பக்கம் இழுப்பது தொடர்பாக பேரம் பேசிய ஆடியோவை வெளியிட்டு காங்கிரஸ் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

கஜேந்திர சிங் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, விசாரணைக்குத் தயார் என்றும் கூறினார். இதனிடையே சஞ்சய் ஜெயினைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி ட்விட்டரில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், ”ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரம் நடத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் மத்திய அமைச்சர் சம்பந்தப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக எஃப்ஐஆர் பதியப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது.

இருப்பினும், பாஜக சிபிஐ விசாரணை கோரியுள்ளது. விவகாரத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து உள்துறை அமைச்சகம், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

  • Serious allegations of horse trading &toppling re various #Raj MLAs incl Central Minister. Police inquiry, FIR & Crl process on. To avoid completion of Crl process, #BJP conveniently demands #CBI. #MHA immly steps in. Wl hand over 2CBI to give clean chit & thwart truth!

    — Abhishek Singhvi (@DrAMSinghvi) July 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நேற்று உள்துறை அமைச்சகம் ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலரிடம் தொலைபேசி உரையாடல் தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளது. முன்னதாக, பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியிருந்தார்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் களேபரம்; அம்பலமான பாஜகவின் ஜனநாயக விரோத செயல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.