ETV Bharat / bharat

சிதம்பரத்திடம் இரண்டாம்கட்ட விசாரணை! - p.chidambaram arrest latest update

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் இருக்கும் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் சிபிஐ அலுவலர்கள் இரண்டாம் கட்டமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

ப.சிதம்பரம்
author img

By

Published : Aug 22, 2019, 11:41 AM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் இருக்கும் அவரிடம் தற்போது சிபிஐ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ப. சிதம்பரத்தின் முன்பிணை மனு நேற்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள மறுத்துவிட்டதையடுத்து, ப. சிதம்பரத்தை சிபிஐ வலைவீசி தேடிவந்த நிலையில், நேற்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் எவ்வித சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். அதன்பின் வீடு திரும்பிய அவரை சிபிஐ அலுவலர்கள் அங்கேயே வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

பின் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்ட ப. சிதம்பரத்திடம் சிபிஐ அலுவலர்கள் இரண்டாம் கட்டமாக தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அவர் இன்று டெல்லி, ரோஸ் அவன்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மாலை 4-5 மணியளவில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:

P Chidambaram likely to produce before Court today

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.