2016ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்ற போது, பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஹரீஷ் ராவத் குதிரை பேரத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியானது.
இந்த வீடியோ காட்சியை தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டது. இதையடுத்து மத்திய அரசு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
பின்னர் வீடியோ ஆதராங்களை குஜராத் மாநிலத்தின் தடயவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்து, ஆதாரங்கள் உண்மையானதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து உத்தரகாண்ட் நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் மீது வழக்குப் பதிவு செய்ய ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் சிபிஐ சார்பாக ஹரீஷ் ராவத், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக அமைச்சருமான ஹரக் சிங் ராவத், வீடியோவை ஒளிபரப்பிய ஊடக ஆசிரியர் உமேஷ் ஷர்மா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கும்பல் வன்முறையில் அலட்சியம் காட்டும் மத்திய அரசு?