ETV Bharat / bharat

ரூ.6.76 கோடிக்கு மோசடி பில்கள் தயாரித்த கடற்படை அலுவலர்கள்!

டெல்லி: மேற்கு கடற்படைக்கு ஐ.டி வன்பொருள் வழங்குவதற்காக நான்கு கடற்படை அலுவலர்கள் ரூ 6.76 கோடிக்கு ஏழு மோசடி பில்களை தயாரித்ததாக கூறப்படுகிறது.

CBI investigation
CBI investigation
author img

By

Published : Jul 30, 2020, 5:17 PM IST

மேற்கு கடற்படைக்கு தகவல் தொழில்நுட்ப வன்பொருள் வழங்குவதற்காக ஆறு கோடியே 76 லட்சம் போலி பில்களை உருவாக்கியதாக நான்கு கடற்படை அலுவலர்கள், 14 பேர் மீது மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கேப்டன் அதுல் குல்கர்னி, தளபதிகள் மந்தர் காட்போல், ஆர் பி சர்மா, கடைநிலை அலுவலர்கள் எல்ஓஜி (எஃப் & ஏ) குல்தீப் சிங் பாகேல் ஆகியோர் ஏழு மோசடி பில்களை ரூ .6.76 கோடிக்கு தயாரித்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட கடற்படை அலுவலர்கள்கள் அனைவரும் கடற்படை அலுவலர்களை மோசடி செய்து பொதுப் பணத்தை கொள்ளையடிப்பதற்கும தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.

தகவல் தொழில்நுட்பம், நெட்வொர்க்கிங் தொடர்பான வன்பொருள் வழங்குவதற்காக 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மும்பையில் உள்ள மேற்கு கடற்படையில் இந்த பில்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த பில்களில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் எதுவும் தலைமையகம், டபிள்யூ.என்.சி-க்கு (மேற்கு கடற்படை) வழங்கப்படவில்லை. பில்கள் தயாரிப்பது தொடர்பான எந்த ஆவணங்களும் அதாவது ஒப்புதல்கள், நிதி அனுமதி, கொள்முதல் ஆணைகள், ரசீது, வவுச்சர்கள் போன்றவை தலைமையகத்தில் கிடைக்கவில்லை. இதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.