ETV Bharat / bharat

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கார் ; காணாமல் போன தந்தை-மகள்!

அமராவதி : காரில் சென்று ஓடையைக் கடக்க முயன்றபோது காரில் இருந்த தந்தை - மகள் இருவரும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்
author img

By

Published : Oct 23, 2020, 9:48 PM IST

ஆந்திரப் பிரதேசம், கோண்டயாகரி நீரோடை பகுதியில் நேற்று (அக்.22) இரவிலிருந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சித்தூரைச் சேர்ந்த பிரதாப் என்பவர் தனது குடும்பத்தினரோடு கனிகிரி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார்.

இரவு 12 மணியளவில் அவர் வந்தபோது, வழியில் இருந்த ஓடையைக் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது கார் திடீரென வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டது. இந்த காரில் பிரதாப், அவரது மனைவி ஷியாமலா, மகள் சாய் வினிதா, உறவினர் ஒருவர், ஓட்டுநர் என ஐந்து பேர் இருந்துள்ளனர்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்

தொடர்ந்து, பிரதாப், அவரது மகள் தவிர்த்து, காரிலிருந்த மற்ற மூவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளனர். தனது மகளை தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்ற பிரதாப் தொடர்ந்து முயற்சித்துள்ளார். ஆனால் இருவரும் வெள்ள நீரில் பரிதாபமாக அடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.