இந்தியா முழுவதும் கரோனா வைரசால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதனிடையே கேரளாவில் அதிகப்படியான பூனைகள் தொடர்ந்து இறப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கேரளாவின் மனந்தவடி, மேப்படி பகுதிகளில் எலிகள் இறப்பு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.
இதனால் சிலர் விலங்குகள் நலத் துறையினரிடம் புகாரளித்துள்ளனர். அவர்கள் இறந்த பூனைகளின் ரத்த மாதிரியை சோதனைக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து விலங்குகளுக்கான சிறப்பு மருத்துவர் ராமச்சந்திரன் பேசுகையில், ''ஃபெலின் பர்வோ வைரஸ் என்னும் தொற்றால்தான் பூனைகள் தொடர்ந்து இறந்துள்ளன.
இதனைச் சரிசெய்ய தடுப்பூசிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்தச் சூழல் விலங்குகளுக்கான தேசிய அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பூனைகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவாது என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சம்கொள்ள வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
இந்த இரண்டு நாள்களில் மேப்படி பகுதிகளில் மட்டும் 13-க்கும் மேற்பட்ட பூனைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரளாவில் பாதுகாப்பாக உணர்கிறோம் - இத்தாலியர் பாராட்டு!