புதுச்சேரி தட்டாஞ்சாவடி, ராமலிங்க நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராயன். மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் மாடு வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்புராயன் அப்பகுதியில் உள்ள சாலையோரம் மாட்டினை கட்டி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான சரவணன், சுப்புராயனிடம் தட்டி கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் கோபம் அடைந்த சரவணன் சுப்புராயனை காலணியால் சரமாரியாக அடித்து உள்ளார். இதையடுத்து சுப்புராயன் கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்றுத் திறனாளியை காலணியால் தாக்கிய அரசு ஊழியர் மீது வழக்குப் பதிவு - அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு
புதுச்சேரி: மாற்றுத் திறனாளியை காலணியால் தாக்கிய அரசு ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.