அண்மையில், எட்வா நகரில் பணியாற்றிவந்த காவல் ஆய்வாளர் ஒருவர், உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்திட்ட காரணத்திற்காக இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட அவருக்கு எதிராக பாஜக மாவட்டத் தலைவர் அஜய் தக்ரே மற்றும் அகில இந்திய பிராமண மகாசபாயினர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது இன்று (ஆகஸ்ட் 27) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காவல்துறை வட்டாரம், "இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் தனது ஆந்வாளர் பதவியில் இருந்தபோது பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்" என்று கூறுகின்றன.
அந்த குறிப்பிட்ட காவல்துறை ஆய்வாளர், பணியில் இருந்தபோதே சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்டதாக குற்றச்சாட்டு இருப்பது கவனிக்கத்தக்கது. ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.