தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள சம்ஷாபாத்தில், பெங்களூரு-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றகொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த ஜிலேபி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஜிலேபி கடைக்குள் அதிவேகமாகச் சென்று மோதியதில், கடையில் பணிபுரிந்துகொண்டிருந்த ஊழியர்கள் மீது சூடான எண்ணெய் கொட்டியது. இதில், நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து நான்கு பேரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடையில் புகுந்ததைப் பார்த்த சாலையில் இருந்தவர்கள் பயந்து ஓடினர். இந்த விபத்தை ஏற்படுத்திய பெண் ஓட்டுநர் ஆர்ஜிஐஏ காவல் நிலையத்தில் சரணடைந்தார். வாகனத்தில் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: மாவோயிஸ்டுகள் வைத்த ஒன்பது கண்ணி வெடிகள் மீட்பு!