கரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள், பொருட்கள், வாகனங்கள் மட்டுமே இயங்கிவருகின்றன. ஏனைய கடைகள், வாகனங்கள் இயங்கவில்லை.
இதனைத்தொடர்ந்து, டெல்லியின் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரகாஷ் ஜவடேகர், நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் வழங்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். அதன்படி ஒரு மனிதருக்கு 7 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் எனவும் ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தலை தள்ளிவைத்து ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் புடின்!