விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கொல்கத்தா பெலூர் மடத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை ராமகிருஷ்ண பரமஹம்சாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
![ராமகிருஷ்ண பரமஹம்சா சிலை அருகே பிரதமர் நரேந்திர மோடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5682246_78_5682246_1578806795637.png)
அதன்பின் மடத்தில் பிரதமர் உரையாற்றியபோது, "நாடு மாற்றம் அடைந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இளைய தலைமுறையினர் ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இளைஞர்களுக்கு பல கேள்விகள் உள்ளன. இந்தச் சட்டத்தால் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வருபவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியும்.
பாகிஸ்தானில் மத ரீதியாக சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் மனித உரிமை பறிக்கப்படுகிறது. அடைக்கலம் தேடி வருபவர்களை நான் எப்படி திருப்பி அனுப்புவது. இதற்குப் பாகிஸ்தான் பதிலளிக்க வேண்டும். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் வடகிழக்கு மாநிலங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்றார்.
இதையும் படிங்க : சுதந்திரம் வேண்டும் என்றால் பாக். செல்லுங்கள் - ஹரியானா அமைச்சர்