கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்த லாக்டவுன் நேரத்தை உபயோகமாகச் செலவிட துடிக்கும் மக்கள் பலரும், சமையல், யோகா உள்ளிட்ட பலவற்றில் தங்களைப் பிஸியாக வைத்துள்ளனர். இச்சமயத்தில்தான் சிலருக்கு கிரியேட்டிவ் நினைப்புகள் எட்டிப்பார்க்கிற்து. அப்படி ஒரு பெண்ணின் கிரியேட்டிவிட்டியான வேலை, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஸ்வேதா ஷா, முக்கிய தொழிலதிபர் ஆவர். இவர் ஊரடங்கு காரணமாக தனது வீட்டிலேயே இருப்பதால், மினியேச்சர் உணவு கைவினைகளை உருவாக்கி அசத்தியுள்ளார். இவருக்குப் பிடித்த உணவான ஃபாஃப்டா (fafda) , தால், இனிப்புகள் போன்றவை கடைகளில் கிடைக்கவில்லை என்பதால், அதை தனது வீட்டிலேயே மினியேச்சர் மாடல்களாக தயாரித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்வேதா ஷா கூறுகையில்," தின்பண்டங்கள், ஸ்வீட்மீட் போன்ற மினியேச்சர் உணவுப் பொருட்களை வீட்டில் தயாரித்துள்ளேன். புதுமையும் படைப்பாற்றலும் தான் எனது சிறப்பு. இந்த மினியேச்சர் உணவுகளை அலங்காரத் துண்டுகளாக உருவாக்கினேன். தனிமைப்படுத்துதல் எனக்கு மீண்டும் கைவினைப்பொருட்களை செய்வதற்கான வாய்ப்பை அளித்துள்ளது. இதுமட்டுமின்றி எனது குடும்பத்தினருக்கும் பருப்பு, அரிசி, பாஜியா போன்ற பல்வேறு உணவுப் பொருட்களை தயாரிக்க கற்றுக் கொடுத்துள்ளேன். இதைச் செய்வதற்கு 30 முதல் 40 நிமிடங்களும்,கலர் அடிப்பதற்கு 15 நிமிடங்களும் ஆகும்" என்றார்.

மினியேச்சர் உணவு கைவினை செய்யும் முறை: 'முதலில் களிமண்னை (clay) சோள மாவுடனும் (corn flour) ஃபெவிகாலுடன் கலக்க வேண்டும். பின்னர் அதை விருப்பமான உணவிற்கு ஏற்ற மாதிரி வடிவம் கொடுக்க வேண்டும். உணவு வடிவம் தயாரித்தப் பிறகு, சரியான கலர் அடித்து உண்மையான உணவு நிறத்திற்கு ஏற்றதுபோல் மாற்றியமைக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கால் கடுக்க பல கி.மீ., நடந்து வந்த தொழிலாளர்கள்! உதவிக்கரம் நீட்டிய காவல் துறை!