ETV Bharat / bharat

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா: கரோனாவை வைத்து காஷ்மீரில் நடப்பது என்ன?

கரோனாவைக் கட்டுப்படுத்த ஜம்மு காஷ்மீரில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் இதுவரை 91 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கரோனா தடுப்புடன் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையும் காஷ்மீரில் துரிதமாக நடைபெறுகின்றது.

JK
JK
author img

By

Published : Jun 13, 2020, 12:08 PM IST

கரோனா பெருந்தொற்று பாதிப்பு முடிவுக்கு வர சில காலம் தேவைப்படும் என்ற நிலையில், அதற்குள் ஜம்மு காஷ்மீரில் வேரூன்றியுள்ள 30 ஆண்டுகால பயங்கரவாதக் குழுக்களுக்கு முடிவுகட்ட இந்திய ராணுவம் களமிறங்கியுள்ளது. பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் முன்னெப்போதும் இல்லாத அணுகுமுறைகள் தற்போது கையாளப்படுகின்றன.

பொது முடக்கம் அறிவிப்புக்குப் பின்னர் இதுவரை நடைபெற்ற 37 என்கவுன்ட்டரில் 91 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீரின் சிறப்புத்தகுதி (சட்டப்பிரிவு 370, 35ஏ) நீக்கப்பட்டபின் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டது.

இந்தக் கட்டுப்பாடு பிப்ரவரி மாத காலத்தில் தளர்த்தப்பட்ட நிலையில் கரோனா காரணமாக மார்ச் மாதத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்குவந்தது.

அரசியல் உறுதியற்றத்தன்மை ஒருபுறம், பனிக்காலம் நிறைவடைந்ததால் இமயமலை எல்லைப் பகுதிகள் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவல் மறுபுறம் என நாட்டின் பாதுகாப்புப் படையினர் தற்போது சவாலான சூழலைச் சந்தித்துவருகின்றனர். இந்தச் சவாலான சூழலை எதிர்கொள்ள காஷ்மீர் மக்கள் பாதுகாப்புப் படையினருக்கு நல்ல ஒத்துழைப்பை தற்போது தருகின்றனர்.

இதன் விளைவாக பயங்கரவாதக் குழுக்களின் முக்கிய உறைவிடமான தெற்கு காஷ்மீர் பகுதியின் சோபியான், புல்வாமா, குல்காம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இதுவரை 22-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். குறிப்பாக ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கியத் தலைவரான ரியாஸ் நய்கோ பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்தார். அத்துடன் பொது முடக்கம் அறிவிப்புக்குப் பின்னர் சுமார் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொது முடக்கம் அறிவிப்பு பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பெரும் வரப்பிரசாதம் என நமது ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். நீருக்குள்தான் மீன் உயிரோடு இருக்க முடியும், தண்ணீரை நிறுத்திவைத்தால் மீன் தானாக வெளியே வந்துதான் ஆக வேண்டும் என அவர் உவமையாகக் கூறியுள்ளார்.

பொது முடக்கம் காலம் ராணுவ வீரர்களுக்கு மேலும் ஒரு சாதகமான அம்சத்தைத் தந்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டாலும் அவர்களின் இறுதி ஊர்வலம் பெருங்கூட்டத்துடன் நடைபெற தொடங்கியது. இதன்மூலம் பிரிவினைவாதிகள் அவர்களைத் தியாகிகள்போல சித்திரிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ள தொடங்கினர்.

தற்போது கரோனா பொது முடக்கம் உள்ளதால் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டவுடன் அவர்களின் முக்கிய உறவினர்கள் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும் இல்லாதபட்சத்தில் ராணுவ வீரர்களே பயங்கரவாதிகளின் உடலை அடக்கம் செய்துவிடுகின்றனர்.

அத்துடன் முன்பெல்லாம் என்கவுன்ட்டர் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் கூட்டமும் அதிகம் காணப்படும் என்பதால் பயங்கரவாதிகள் மக்களோடு மக்களாகத் தப்பிச் சென்றுவிடுவார்கள். ஆனால் தற்போது பொது முடக்கம் அமலில் உள்ளதால் அவர்களுக்குத் தப்பிக்க வழியில்லை.

எனவே இந்தப் பொது முடக்கம் அறிவிப்பு ஜம்மு காஷ்மீரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சேர்த்து பயங்கரவாதக் கட்டுப்பாடு நடவடிக்கைகளையும் திறம்பட மேற்கொள்ள உதவுகிறது.

இதையும் படிங்க: இந்திய ராணுவ அகாதமியில் பயிற்சி: ராணுவத்தில் இணையும் 333 வீரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.