ஆந்திர மாநிலத்தில் 2019 மக்களவைத் தேர்தலோடு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றிபெற்று அசுர பலத்துடன் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மூத்த அரசின் மூத்த அலுவலர்கள், இன்று காலை அமராவதியில் உள்ள ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லம் சென்று அவருக்கு பாரட்டு தெரிவித்துள்ளனர்.
![ஜகன்மோகன் ரெட்டியை சந்திக்க செல்லும் மூத்த அரசு அலுவலர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3370821_andra.jpg)
மே 30ஆம் தேதி, ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்கிறார்.