அரவிந்த் கெஜ்ரிவால்
பட்ஜெட் குறித்து டெல்லி மக்கள் அதீத எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் மத்திய அரசு மீண்டும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டுள்ளது. பாஜக முன்னுரிமை அளிக்கும் இடத்தில் டெல்லி இல்லை. டெல்லி மக்கள் ஏன் பாரதிய ஜனதாவினருக்கு வாக்களிக்க வேண்டும்?
ராஜ்நாத் சிங்
நாட்டின் பொருளாதாரத்தை தட்டியெழுப்பும் பட்ஜெட். புதிய மற்றும் உறுதியான இந்தியாவை இது உருவாக்கும். மக்கள் நலம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கு பட்ஜெட் முக்கியத்துவம் அளித்துள்ளது. குறிப்பாக விவசாயத் துறை வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
சீதாராம் யெச்சூரி
வெற்று அறிவிப்புகள், முழக்கங்கள் மட்டுமே உள்ளது. வேலைவாய்ப்பின்மை, மக்களின் துயரம், வளர்ந்துவரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றைப் போக்க கணிசமான திட்டங்கள் எதுவும் இல்லை.
ராகுல் காந்தி
வரலாற்றில் இது ஒரு மிக நீண்ட பட்ஜெட் உரையாக இருக்கலாம். ஆனால் இது வெற்று உரை. நாட்டின் முக்கியப் பிரச்னையான வேலைவாய்ப்பின்மையில் கவனம் செலுத்தப்படவில்லை. நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க எந்த உறுதியான திட்டமும் இல்லை. தந்திரமாக சிலவற்றைச் சொல்கின்றனர். ஆனால் அவைகள் செயல்பாட்டில் இல்லை. திரும்பத் திரும்ப அதே பேச்சு. வெற்று திட்டங்கள்.
யோகி ஆதித்யநாத்
விவசாயிகளுக்கு ஆதரவான வளர்ச்சி சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். இந்த பட்ஜெட் இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
இவ்வாறு பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆதிச்சநல்லூரும்... நிதியமைச்சரின் அறிவிப்பும்...! - 3000 ஆண்டுகள் பின்னோக்கிய பயணம்!