வீடுகள் வாங்குவதை எளிமையாக்கும்விதத்தில், ஊக்கப்படுத்தும்விதத்திலும், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் வீட்டுவசதித் திட்டங்களை ஊக்குவிக்கும்விதமாக மலிவு விலை வீடுகள் கட்டுமான திட்டங்களுக்கு ஓராண்டு வரிவிலக்கு அளிக்கப்படும் எனக் கடந்த ஜூலை மாதம் தாக்கல்செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பிரிவு 80EEAஇன் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த வரிச்சலுகையை மேலும் ஒரு வருடம் நீட்டித்து இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலிவு விலை வீடுகட்டுமான திட்டங்களுக்கு வாங்கிய கடன்களுக்கான வட்டித்தொகையில் 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆதிச்சநல்லூரும்... நிதியமைச்சரின் அறிவிப்பும்...! - 3000 ஆண்டுகள் பின்னோக்கிய பயணம்!