பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூர் மாவட்டமானது இந்திய - பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் வெடிமருந்துப் பொருட்கள் இருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து, ஃபெரோஸ்பூரில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பாதுகாப்புப் படையினர் இன்று (செப்.12) சோதனை நடத்தினர்.
இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது, காலை 7 மணியளவில் எல்லைக்கு அருகே ஒரு வயலில் சந்தேகத்துக்கு இடமாக கிடந்த ஒரு பையை சோதனை இட்டனர். அதில் மூன்று ஏகே-47 ரகத் துப்பாக்கிகள், இரண்டு எம்-16 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.