ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் அணைப்பகுதியில் சிக்கியிருந்த கர்ப்பிணியை மீட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். நேற்று (செப்டம்பர் 6) அணையில் ஒரு படகு நிற்பதை கண்ட எல்லைப் பாதுகாப்பு படையினர், அந்த படகினை ஆய்வு செய்தனர். அதில் சுகாதார ஊழியருடன் பூர்ணிமா ஹண்டால் என்ற கர்ப்பிணி மயக்க நிலையில் இருந்துள்ளார்.
இதை அறிந்ததும் எல்லைப் பாதுகாப்பு படையினர் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்ததும் அந்த கர்ப்பிணியை மல்கங்கிரி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அந்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்துக்குள்ளே பிரசவமானதாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, அப்பெண்ணிற்கு கொசு வலை, துண்டு, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் வழங்கினர்.
இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 5 கி.மீ. கட்டிலில் தூக்கிச்சென்ற அவலம்!