பஞ்சாப் பகுதியை ஒட்டியுள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் வழக்கம்போல எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள்
அப்பொழுது அட்டாரி பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் கையில் துப்பாக்கியுடன் இருப்பதைக் கண்டறிந்த எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் அவர்களை அதே இடத்தில் சுமார் அதிகாலை 2.30 மணிக்கு சுட்டு வீழ்த்தினர். பின்னர் அவர்களிடமிருந்து துப்பாக்கியைப் பறிமுதல்செய்தனர்.
தேடுதல் பணியில் வீரர்கள்
இந்தச் சம்பவத்தை அடுத்து, இவர்களுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பதை அறிய, பயங்கர மூடுபனிகளுக்கு நடுவே எல்லைப் பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த ஆய்விற்குப் பின்னரே தெளிவான விளக்கங்கள் வழங்கப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை; ஒருவர் கைது