கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜினாமா காரணமாக கவிழ்ந்தது. இந்நிலையில் 105 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக ஆட்சியமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுவந்தது.
இந்நிலையில், அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா இன்று மாலை 6 மணியளவில் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். முன்னதாக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா.
அதன்படி, வஜுபாய் வாலா பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, முதலமைச்சராக பதவியேற்கவுள்ள எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைக்கிறார்.