கர்நாடக அரசு சந்தூர் என்ற இடத்தில் மூன்று ஆயிரத்து 600 ஏக்கர் நிலத்தை ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முயற்சி எடுத்துவருகிறது. இதில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, அம்மாநில பாஜக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது. அதன்படி முன்னாள் முதலமைச்சரும் அம்மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினர் நேற்று பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவும் படுத்துறங்கி தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினர், தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.