ETV Bharat / bharat

உலக தலைவர்களின் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையையொட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தமிழர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

PM
PM
author img

By

Published : Jan 16, 2020, 7:57 PM IST

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. போகிப் பண்டிகையில் தொடங்கி காணும் பொங்கல் வரை 4 நாள்களுக்கு தமிழர் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவிற்கு பேருதவியாக இருக்கும் சூரியனுக்கும் பிற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "தமிழில் வணக்கத்தை தெரிவித்து, கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது எனக் கூறியுள்ளார். தை பொங்கல் கொண்டாடும் இந்த வேளையில், எங்கள் குடும்பத்தின் சார்பாக சோஃபியும் நானும் தை பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்'' இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் "அற்புதமான பிரிட்டன் தமிழ் மக்களுக்கும், உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள். மிகவும் சுவையான இனிப்பு பொங்கலை அனைவரும் சுவைத்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன். அறுவடை நாளை கொண்டாடும் இந்த நாளில் பிரிட்டன் வளர்ச்சிக்காக தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பையும் நான் கொண்டாட விரும்புகிறேன். வர்த்தகம், பொருளாதார துறைகளில் பணியாற்றுபவர்கள், ஆசிரியர்கள், மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என அனைவரின் பங்களிப்பும் உண்மையான மாற்றத்தை உருவாக்கியுள்ளன. எனவே எங்களின் அற்புதமான தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். சந்தோஷங்களையும், நன்மைகளையும் இந்த பாரம்பரிய பொங்கல் விழா அளிக்கட்டும்." இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன்" - மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.