ஐரோப்பிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 28 உறுப்பினர்கள் நேற்று பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்து காஷ்மீர் நிலை குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் அக்குழு சந்தித்துப் பேசியது. முன்னதாக, வடமேற்கு இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் டேவிஸுக்கும் காஷ்மீரைப் பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், காவல் துறையினர், பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் தனது பயணத்தின்போது உடனிருக்கக் கூடாது என அவர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துவரும் நிலையில், சுதந்திரமாகப் பயணம் செய்ய அனுமதி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீரை பார்வையிட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு வருகை!