ETV Bharat / bharat

பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சியும்... ஆதிக்கமும்...! - பிரிக்ஸ் நியு டெவலப்மென்ட்

உலகின் 27 சதவிகிதம் நிலப் பரப்பு, 41 சதவிகித மக்கள் தொகை, உலகப் பொருளாதாரத்தின் 23.2 சதவிகிதத்தை கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பு சர்வதேச அளவிலான முக்கியத்துவத்தை பத்தே ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

Brics
author img

By

Published : Nov 19, 2019, 3:15 PM IST

11ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரிக்ஸ் அமைப்புகளில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றார்.

'கோல்டுமேன் சாக்ஸ் வள மேம்பாடு' அமைப்பின் தலைவரான ஜிம் ஓ நில், உலகின் வேகமாக வளர்ந்துவரும் நான்கு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவற்றை 2001ஆம் ஆண்டு 'பிரிக்' என்று பெயரிட்டு அழைத்தார்.

வரும் 2050ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் ஐந்து பொருளாதார சக்திகளில் நான்கு நாடுகளாக மேற்கண்ட நாடுகள் எழுச்சி பெறும் என்ற கணிப்பையும் அவர் முன்வைத்தார். இந்த நாடுகளின் அசாத்திய பொருளாதார வளர்ச்சியை இனங்கண்டு இந்த கணிப்பை அவர் முன்வைத்தார்.

தங்களின் வலிமையை உணர்ந்த பிரிக் நாடுகள் தனது முதல் உச்சி மாநாட்டை 2009ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடத்தியது. பின்னர் இந்த அமைப்பு தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்து விரிவுபடுத்திய நிலையில் இந்தோனேசியா, தென்கொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளும் இந்தக் குழுவில் சேர விருப்பம் தெரிவித்தன.

உலகின் 27 சதவிகிதம் நிலப் பரப்பையும் 41 சதவிகித மக்கள் தொகையும் கொண்டுள்ள இந்த பிரிக்ஸ் அமைப்பு உலகப் பொருளாதாரத்தின் 23.2 சதவிகிதத்தை உள்ளடக்கியுள்ளது. இதில் பெரும் பங்களிப்பைச் சீனா தருகிறது. இந்தப் பொருளாதார வலிமை பிரிக்ஸ் அமைப்புக்கு முக்கியத்துவத்தை அளிக்கிறது.

உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அமைப்புகளான சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்), உலக வங்கி என்ற இரு அமைப்பின் மேற்கத்தியத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பிரிக்ஸ் அமைப்பு முனைப்புக் காட்டிவருகிறது.

பொறுமையாக ஒருங்கிணைப்பை பெற்றுவரும் பிரிக்ஸ் அமைப்பு, 2014ஆம் ஆண்டு தனக்கென வங்கி ஒன்றை உருவாக்கியது. நியூ டெவலப்மெண்ட் பேங்க் (புதிய வளர்ச்சி வங்கி) என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த வங்கிக்கு முதலாண்டிலேயே ஒவ்வொரு நாடும் 10 பில்லியன் டாலர் தொகையை தனது பங்களிப்பாக வழங்கியது. தனது அமைப்பில் உள்ள நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த வங்கி நிதியுதவி செய்கிறது.

அத்துடன் 2014ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு அவசர கால நிதி என்ற 100 பில்லியன் டாலர் மூலதனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட நாடுகளில் பொருளாதாரச் சிக்கல் ஏற்படும்பட்சத்தில் உதவிக்கரம் நீட்ட இந்த நிதி பயன்படுத்தப்படும்.

பிரிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் தகவல் தொழில்நுட்பம், சுங்கம், பருவநிலை மாற்றம், பயங்கரவாத ஒழிப்பு, சுகாதார மேம்பாட்டு ஆராய்ச்சி, மாசுக் கட்டுப்பாடு, எரிசக்தி போன்ற துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டுவருகின்றன.

பிரிக்ஸ் அமைப்பின் மீது சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. சீனாவை மையமாக வைத்தே இந்த அமைப்பு இயங்குவதாகவும் அனைத்து நாடுகளும் பொது கண்ணோட்டத்தில் இயங்காமல் சுயநலம் சார்ந்து செயல்பட்டுவருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஆனால் இத்தகைய சவால்களைச் சிக்கல்களாகப் பாராமல் இவற்றிலிருந்து சிறந்த தீர்வுகளைக் கண்டறிவதே எதிர்காலத் தேவையாகும்.

பிரிக்ஸ் அமைப்பின் தேவையென்ன அதனால் விளைந்த பலன்கள் என்ற கேள்வி பலராலும் முன்னெழுப்பப்படுகிறது. பெருங்குழுக்களைவிட, சிறுகுழுக்களைக் கையாள்வது எளிது என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. சார்க் அமைப்பு உயிர்ப்புத் தன்மையை இழந்து பல காலமாகிவிட்டது.

ஜி 20 நாடுகள் மற்றொரு ஐநாவாக உருமாறியுள்ளது. அப்படியிருக்க பிரிக்ஸ், பிம்ஸ்டெக், ஆசியான் போன்ற அமைப்புகளின் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தப் பின்னணியில் பயங்கரவாத ஒழிப்பு, நிதிச்சிக்கல் ஆகியவை இம்முறை நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் கருப்பொருளாக அமைந்தன.

Intro:Body:

Just about to be calm, CAB set to unsettle NorthEast India again

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.