இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "புட்காம் மாவட்டத்தில் உள்ள அரிசல் கிராமத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையின் முடிவில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை வீசினர்.
அப்போது தேடுதல் வேட்டையைத் தொடர்ந்த பாதுகாப்பு படையினர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதி ஸஹூர் வானியை கைது செய்து அவரிடமிருந்த ஆயதங்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மற்ற பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்கள் குறித்து தெரியவந்தது.
இந்நிலையில், மேலும் நான்கு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யூனிஸ் மிர், அஸ்லாம் ஷேக், பர்வைஸ் ஷேக், ரெஹ்மான் லோன் ஆகியோர் மற்ற பயங்கரவாதிகளுக்கு தங்கும் இடங்களையும் போக்குவரத்து வசிதகளை செய்துதந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: சிக்கனத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையை ஆளுநர் மாளிகை பின்பற்றும்’ - கிரண்பேடி