கர்நாடக மாநிலம், ரைச்சூர் சித்தனூராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை ஒரு கும்பல் வீடு புகுந்து இன்று (ஜூலை 11) மாலை தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் சாவித்ரம்மா (55), ஸ்ரீதேவி (38), ஹனுமேஷ் (35), நாகராஜ் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே எழுந்த விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க...காணாமல்போன பாலிடெக்னிக் மாணவர் கடற்கரையில் சடலமாக மீட்பு!