பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் 53.29 விழுக்காடுப் பங்குகளைத் தனியாருக்கு அரசு விற்பனை செய்ய இருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், இதன் 70ஆயிரத்து, 900 கோடி ரூபாய் (ரூ.70,900 கோடி) மதிப்புள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் இந்த பங்குகளின் உள் அடங்கும் என்று கூறப்பட்டது.
இதனிடையில் தங்களுக்குப் பங்கு விற்பனை குறித்து பெட்ரோலிய அமைச்சகத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என பிபிசிஎல் நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.
பல நாட்களாக பிபிசிஎல் நிறுவனம் தனியார் மயமாக்கப்படப் போகிறது எனும் செய்தி உலாவி வருவதைக் காணமுடிகிறது. ஆனால், இதுகுறித்து நிறுவனத்தில் நிர்வாக தரப்பிலிருந்து எந்தவொரு அறிக்கையோ, செய்தியோ நாங்கள் இதுவரை வெளியிடவில்லை என பிபிசிஎல்-இன் இயக்குநர் (நிதி) என். விஜயகோபால் கூறியுள்ளார்.
விவசாயிகளைப் பாதுகாக்குமா ஒப்பந்தச் சட்டம்?
மேலும், இது சம்பந்தமாக அரசின் பெட்ரோலிய அமைச்சகம் தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும்; ஆனால் அமைச்சகத்திடம் இருந்து பங்குகள் விற்பனைக் குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.