சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காந்தியடிகளை நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். அவர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், எந்த நோக்கத்திற்காக கமல் அப்படி பேசினார் என்பது தெரியவில்லை. தீவிரவாதம் என்பது நமது நாட்டில் உள்ள அனைத்து மதத்திலும் இருக்கிறது. மேலும், ஆர்எஸ்எஸ்க்கும், பாஜகவிற்கும் இந்த தேர்தலில் எதுவும் கிடைக்காது என்பதால் மதத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்து மதத்தை முன்வைத்து அரசியல் செய்வது தான் அவர்களின் வேலையாகும்.
மேகக்கூட்டங்கள் இருந்தால் ரேடாரில் விமானங்களை கண்டுபிடிக்க முடியாது என்று புதிய விஞ்ஞானி போன்று மோடி பேசிக் கொண்டிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் தான் முதன்முதலில் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என முன்மொழிந்தார். அப்படியிருக்கையில், அவர் எப்படி பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். தமிழிசை கூறியது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மிகப் பெரிய நகைச்சுவை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.