ETV Bharat / bharat

இந்திய வருகை ரத்து; நரேந்திர மோடியிடம் டெலிபோனில் பேசிய போரிஸ் ஜான்சன்! - பயணம் ரத்து

டெல்லி: குடியரசு தின விழா அன்று இந்தியாவிற்கு வருகை தரவிருந்த போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கரோனாவைக் கருத்தில் கொண்டு, அப்பயணத்தை ரத்து செய்தார்.

Boris Johnson speaks to PM Modi
Boris Johnson speaks to PM Modi
author img

By

Published : Jan 6, 2021, 9:09 AM IST

Updated : Jan 6, 2021, 10:20 AM IST

டெல்லியில் வரும் 26ஆம் தேதி இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை பிரதமர் போரிஸ் ஏற்றுக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவல் தீவிரமடைந்தது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை பிரதமர் போரிஸ் ஜான்சன் அமல்படுத்தினார்.

தன்னுடைய நாட்டின் நிலைமை இப்படியிருக்க இந்தியாவிற்கு வருகை தருவது சாத்தியமில்லை என்பதால் போரிஸ் ஜான்சன், தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் நேற்று(ஜனவரி 5) தொலைபேசி வாயிலாகப் பேசி தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்தியாவை புகழ்ந்து தள்ளிய பில்கேட்ஸ்!

Last Updated : Jan 6, 2021, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.