ETV Bharat / bharat

“இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் கலந்துகொள்வார்” - டொமினிக் ராப்

author img

By

Published : Dec 15, 2020, 8:15 PM IST

டெல்லி : வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் இந்திய அரசின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் கலந்துகொள்வாரென அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து வெளியுறவு  அமைச்சர் டொமினிக் ராப்

இந்தியா-இங்கிலாந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று (டிச.15) நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இன்று(டிச.15) டெல்லி வந்தடைந்த இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராபுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் இரு தரப்பினரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டனர்.

அப்போது பேசிய இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப், “ வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் இந்திய அரசின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் கலந்துகொள்வார். இது ஒரு பெரிய மரியாதை. இந்தியாவின் நட்பு கரத்தை பற்றும் வகையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, அடுத்த ஆண்டு பிரிட்டன் நடத்தும் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சார்பில் இந்திய பிரதமர் மோடியை அழைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது உலக அரங்கில் மிகப்பெரும் நம்பிக்கை ஒளியாக மாறியுள்ள இந்தியாவுடன் இங்கிலாந்து தனது கூட்டணியை ஆழப்படுத்த விரும்புகிறது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர், இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 11 சதவீதமாக வளர்ந்துள்ளது” என்றார்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “இரு நாடுகளுக்கு இடையே கூட்டுறவு சிறப்பான நிலையில் உள்ளன. இரு நாட்டு உறவையும் தாண்டி நட்பு நாடுகள், மூன்றாம் உலக நாடுகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பை மேற்கொள்ள இருதரப்பும் தயாராக உள்ளது. முன்னதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இரு வெளியுறவு அமைச்சர்களுக்கிடையேயான இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பதில் செலுத்தப்பட்டது. பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம் உள்ளிட்ட ஐந்து பரந்த கருப்பொருள்களில் கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் குடியரசு தினத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பது ஒரு புதிய சகாப்தத்தின் அடையாளமாக இருக்கும். இது இருநாட்டு உறவில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.

இந்த சந்திப்பானது, இரு தரப்பினருக்கும் இடையில் புவி-இடஞ்சார்ந்த, காலநிலை மாற்றம், பிரெக்ஸிட் பிந்தைய வர்த்தகம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டின் பாதுகாப்புக்கு இவ்வளவு ரூபாய் நிதி ஒதுக்கீடா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.