வரும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் 96ஆவது பிறந்தநாளாகும். இந்நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1990களில் அவருடன் நெருக்கமாக பழகிய எழுத்தாளர் ஷக்தி சின்ஹா ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். ‘தி இயர்ஸ் தட் சேன்ஜ்டு இந்தியா’ என பெயரிடப்பட்ட இப்புத்தகம், வாஜ்பாயின் அரசியல் செயல்பாடுகளைக் குறித்து விளக்குகிறது.
வாஜ்பாய், 1996 முதல் 1997ஆம் ஆண்டில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஷக்தி சின்ஹா அவருக்கு செயலாளராகப் பணியாற்றினார். அதன்பின்னர் அவரது தனிச்செயலாளராகவும் ஓராண்டு (1998-99) பணியாற்றியிருக்கிறார்.
1998இல் இந்திய அரசாங்கத்தை கட்டியெழுப்பி அதை நடத்தும்போது வாஜ்பாய் சந்தித்த இன்னல்கள் குறித்து இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக எழுத்தாளர் ஷக்தி சின்ஹா தெரிவித்தார்.
300க்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதப்பட்ட இப்புத்தகம் 10 அத்தியாயங்களைக் கொண்டது. தற்போது இதன் பிரதிகளுக்கு ஆன்லைனில் முன்கூட்டியே ஆர்டர் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 30 லட்சம் பிரதிகள் விற்பனை; சாதனை படைத்த ஒபாமாவின் புத்தகம்!