நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11, 18, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் இதுவரை 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று நான்காம் கட்டமாக பிகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் ஜெமினி கணேஷின் மகளும் பாலிவுட் நடிகையுமான ரேகா மும்பையின் பாந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.