தற்போதைய சூழலில் மாணவர்கள், இளைஞர்கள், மென்பொருள் பொறியாளர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர்களில் சிலர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்தக் கேளிக்கை தரும் போதை காரணமாக அவர்கள் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுகின்றனர். இதனால் மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாக்குகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அதீத போதை.
அதுமட்டுமின்றி மது குடிப்பதால் கண்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. காதுகள் கேளாமை, நரம்புத் தளர்ச்சி போன்ற குறைபாடுகளும் ஏற்படுகிறது. ஆல்கஹால் உடலில் உட்புகுவதால் உணர்வுகள் தூண்டப்பட்டு கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் அவர்களால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது. இதன் காரணமாக அவர்களால் சரியான நேரத்தில் பிரேக்குகளைப் பயன்படுத்த முடியாது. இதனைத் தடுக்க வேண்டுமானால் அனுமதிக்கப்பட்ட வரம்புகளைவிட அதிகமாக மது அருந்திய பின் ஒருவர் வாகனம் ஓட்டக்கூடாது.
சில குடிமகன்கள் இருசக்கர வாகனங்களிலும் கார்களிலும் வீடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் சாலை வளைவுகள், வேகத்தடைகளில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதுமட்டுமின்றி கவனக்குறைவு காரணமாக மற்றவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
தெலங்கானாவின் பஞ்சாரா ஹில்ஸ், ஜூபிலி ஹில்ஸ், கைராதாபாத், அமீர்பேட்டை, பேகம்பேட்டை, ஆபிட்ஸ், சிக்கட்பள்ளி, நாராயங்குடா, அம்பர் பேட், தர்னகா, ஹப்சிகுடா, உப்பல் போன்ற பகுதிகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகின்றன.
அதிகாலையில் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த போக்குவரத்துக் காவல் துறையினர் இல்லாததால், ஓட்டுநர்கள் பொறுப்பற்ற முறையில் ஓட்டுகிறார்கள். அதீத வேகமாகச் சாலையில் பயணிக்கும் ரைடர்கள் தங்களின் வலியைகூட அறியமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அதீத போதையில் இருப்பார்கள்.
தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டும்போதும் மோசமான தலைக்காயங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அவர்களின் போதைநிலை காரணமாக வலி மிகக் குறைவாக இருக்கும்.
சில சந்தர்ப்பங்களில், திடீர் அதிர்ச்சியால் இதயம் துடிப்பதை நிறுத்துகிறது. இதற்கும் காரணமாக மது என்னும் அரக்கன். ஒரு போதையில் வாகனம் ஓட்டிய ஆரம்ப சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு உணர்வை உணர்ந்தாலும், அவரது பார்வை எந்த நேரத்திலும் மங்கலாகிவிடும். பிரகாசம், மாறுபாட்டிற்கான பார்வையை சரிசெய்ய கண்ணின் திறனை ஆல்கஹால் குறைக்கிறது.
ஆல்கஹால் உட்கொண்ட 5 நிமிடங்களுக்குள் அதன் வேலையை காட்ட தொடங்கிவிடும். கால்கள், கைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இழப்பு ஏற்படும். ஒருவர் குடிபோதையில் மூளையின் செயல்திறன் பாதிக்கப்படும்.
மது அருந்தி வாகனம் இயக்க வேண்டாம் என எத்தனை முறை கூறினால், பொதுமக்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதே போக்குவரத்து காவலர்களின் ஆதங்கம். மதுவில்லா பயணம் விபத்தை தவிர்க்கும் என்ற விழிப்புணர்வு நாம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். அதேபோல், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்துபவன் மனித வெடிகுண்டுக்கு சமம் என்பதை நாம் உணர வேண்டும்!
இதையும் படிங்க : வெங்காயம் தட்டுப்பாடு ஏன்?