ரஷ்யாவைச் சேர்ந்த பிலிப் புடேய்கின் என்பவரால் உருவாக்கப்பட்ட விளையாட்டு 'ப்ளு வேல்'. மொத்தம் 50 நாட்கள் விளையாடப்படும் இதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க் தரப்படும். 50ஆவது நாள் தற்கொலை செய்வதே இதன் டாஸ்க். இதன் காரணமாகப் பல நாடுகளில் இந்த 'ப்ளூ வேல்' விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 20 வயதான சந்தோஷ் மாலி என்பவர் கடந்த 18ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு கண்டெடுக்கப்பட்டார். இரண்டாம் ஆண்டு பி.காம் மாணவரான அவரது சமூக வலைதளங்களில் 'ப்ளூ வேல்' தொடர்பான சின்னங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
மேலும் இதுதொடர்பாக அவர் எழுதிய குறிப்பையும் கைபற்றிய காவல் துறையினர் அவர் 'ப்ளூ வேல்' விளையாட்டின் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர்.