மேற்கு வங்கத் தேர்தல்
மேற்கு வங்க மாநிலத்தில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அங்கு தனது தடத்தை பதித்த பாஜக, வரும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும் என தற்போது இருந்தே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பலத்தையும் மீறி திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தோற்கடிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி, பாஜக தனது முழு படை பலத்தையும் மேற்கு வங்கத்தில் களமிறக்கியுள்ளது.
கடந்த இரு முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தில் அபார வெற்றியுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த மம்தா இம்முறை கடும் சவாலைச் சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர்-பாஜக மோதல்
இந்தியாவின் முன்னணி அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் தற்போது முதலமைச்சர் மம்தாவுக்கு தற்போது தேர்தல் ஆலோசகராக பணிபுரிந்துவருகிறார்.
-
For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal
— Prashant Kishor (@PrashantKishor) December 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
PS: Please save this tweet and if BJP does any better I must quit this space!
">For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal
— Prashant Kishor (@PrashantKishor) December 21, 2020
PS: Please save this tweet and if BJP does any better I must quit this space!For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal
— Prashant Kishor (@PrashantKishor) December 21, 2020
PS: Please save this tweet and if BJP does any better I must quit this space!
வரும் தேர்தல் முடிவுகள் குறித்த தனது கணிப்பை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த பிரசாந்த் கிஷோர், "மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கை கூட பாஜக பெறாது. எனது கணிப்பை மீறி பாஜக வெற்றிபெற்றால் ட்விட்டரை விட்டு வெளியேறுவேன்" என சூளூரைத்துள்ளார்.
-
भाजपा की बंगाल में जो सुनामी चल रही हैं, सरकार बनने के बाद इस देश को एक चुनाव रणनीतिकार खोना पड़ेगा।
— Kailash Vijayvargiya (@KailashOnline) December 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">भाजपा की बंगाल में जो सुनामी चल रही हैं, सरकार बनने के बाद इस देश को एक चुनाव रणनीतिकार खोना पड़ेगा।
— Kailash Vijayvargiya (@KailashOnline) December 21, 2020भाजपा की बंगाल में जो सुनामी चल रही हैं, सरकार बनने के बाद इस देश को एक चुनाव रणनीतिकार खोना पड़ेगा।
— Kailash Vijayvargiya (@KailashOnline) December 21, 2020
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜகவின் தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, "மேற்குவங்கத்தில் பாஜகவின் சுனாமி வீசத்தொடங்கியுள்ளது. தேர்தலில் பாஜக வென்று ஆட்சி அமைத்தவுடன் நாடு ஒரு தேர்தல் நிபுணரை இழக்கவுள்ளது" என பிரசாந்த் கிஷோரைத் தாக்கியுள்ளார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத விதமாக பாஜக மேற்கு வங்கத்தில் 18 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றி ஆச்சரியமளித்தது.
இதையும் படிங்க: வரும் 31ஆம் தேதி வரை பிரிட்டன் நாட்டிற்கு விமான சேவைகள் ரத்து!