ETV Bharat / bharat

'காந்தி உயிருடன் இருந்திருந்தால் பாஜக அரசை முதல் நபராக எதிர்த்திருப்பார்!' - மத்திய பாஜக அரசு

டெல்லி: மகாத்மா காந்தியடிகள் தற்போது உயிரோடு இருந்தால் மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுடன் இணைந்து போராடியிருப்பாரென அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

காந்தியடிகள் உயிருடன் இருந்திருந்தால் பாஜக அரசை முதல் நபராக எதிர்த்திருப்பார் - ராகுல் காந்தி

author img

By

Published : Sep 30, 2020, 12:59 AM IST

செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் எட்டு சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை காங்கிரஸ், டி.எம்.சி., திமுக, மதிமுக, விசிக, ஆர்.ஜே.டி., சிபிஐ, சிபிஐ (எம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் 'உழவர்களுக்கு எதிரான சதி' எனக் குறிப்பிட்டு எதிர்ப்புத் தெரிவித்தன. நாடு முழுவதும் மத்திய அரசின் இந்தச் சட்ட முன்வடிவுகளைக் கண்டித்து போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் பஞ்சாப், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, ஒடிசா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தச் சட்ட முன்வடிவுகளை எதிர்த்து உழவர் போராட்டங்கள் தீவிரமடைந்துவருகின்றன.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளோடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அதனைத் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் "விவசாயிகளின் குரல்" என்னும் தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

அதில் பேசிய அவர், "மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் வேளாண்மை, விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றும்.

நாடு சுதந்திரத்திற்காகப் போராடும்போது பிரிட்டிஷ்களுக்கு ஆதரவாக நின்ற தங்களது தாய் அமைப்பைச் சேர்ந்த வழிகாட்டிகளைப் போலவே மத்திய பாஜக அரசு தற்போது வெளிநாட்டினருக்கு ஒட்டுமொத்த நாட்டையும் அடகுவைக்கப் பார்க்கிறது.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்ற அழிவுக்கார திட்டங்களுக்கும் வேளாண் சட்டங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

அந்தத் திட்டங்கள் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் காலையும் கோடரியால் வெட்டின. இந்த மூன்று வேளாண் சட்டங்கள் அவர்களது இதயங்களை கத்தியால் குத்துகின்றன.

மகாத்மா காந்தி பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராகப் போராட பல இயக்கங்களைத் தொடங்கினார். அந்த "பாபு" இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் நிச்சயமாக இந்த வேளாண்மைச் சட்டங்களை எதிர்த்திருப்பார்.

இந்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் பஞ்சாப், ஹரியானா, பிகார், மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு எம்.எஸ்.பி. குறித்து எந்த நம்பிக்கையும் கொடுக்கவில்லை. இவை நிச்சயமாக விவசாயிகளை சுரண்டவே உதவும்.

விவசாயிகளே பெரும்பாலும் இடைத்தரகர்களாக (கமிஷன் ஏஜெண்ட்ஸ்) பணிபுரிகிறார்கள். அவர்களைத் தான் அதிகம் லாபம் பார்க்கிறார்கள் என்று இந்த அரசு சொல்கிறது. அவர்கள் சொல்வதுபோல இந்த இடைத்தரகர்களை ஒழித்தால் அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்? கார்ப்பரேட்டு நிறுவனங்கள்தான் நிரப்பும்.

எம்.எஸ்.பி.யை விலையைவிட கூடவோ குறையவோ யாராவது விளைப்பொருள்களை வாங்கினால் அது குற்றமாக கருதப்படும்.

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின்போது, உற்பத்தியான பொருளைக் குறைந்த விலைக்கு வாங்கி, பின்னர் நுகர்வோருக்கு மூன்று அல்லது நான்கு மடங்கு விலை உயர்த்தி விற்ற பழைய முறையே மீண்டும் நடக்கும்.

இந்தச் சட்டங்களின் முக்கிய நோக்கம் விவசாயிகளையும், தொழிலாளர்களையும், உழைக்கும் வர்க்க மக்களையும் சுரண்டுவதேயாகும்.

சாமானியர்களின் குரல்கள் ஒரு காலத்தில் சுதந்திரத்தை வெல்ல முதன்மையான பங்கு வகித்தது. மிகுந்த சக்திவாய்ந்த அந்தக் குரல்கள் இந்த முறை விவசாயிகளின் குரலாக ஒலிக்கிறது. இந்த கலகக்குரல் நிச்சயம் வெல்லும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.