மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றி மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி அளித்தது. 2014 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்த பாஜகவால் தற்போது எப்படி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற முடிந்தது என்று மம்தா உட்பட பலர் யோசித்துவருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே திருணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்மல் குந்த் கடையொன்றில் நின்று கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக்கொன்றது பாஜகதான் என திருணாமுல் காங் குற்றம்சாட்ட அதனை பாஜக மறுத்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றி ஊர்வலத்திற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடைவிதித்துள்ளார்.