கரோனா பெருந்தொற்று பாதிப்பு நாட்டில் வேகமாகப் பரவிவந்தாலும் அரசியல் பரபரப்புகளும் பஞ்சமில்லாமல் அரங்கேறிவருகின்றன. நாட்டில் ரிசார்ட் (உயர் ரக சொகுசு விடுதி) அரசியல் மீண்டும் திரும்பியுள்ளது.
காங்கிரஸ், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள உயர் ரக சொகுசு விடுதியில் சில தினங்களுக்கு முன் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
அதன்பின்னர் அவர்கள் ராஜஸ்தானுக்கே திரும்ப கொண்டுவரப்பட்டு அங்குள்ள உயர் ரக சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவருடன் மூத்தத் தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், "மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த பாஜக அதே திட்டத்தை ராஜஸ்தானிலும் செயல்படுத்த முயலுகிறது.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தலா 25 கோடி ரூபாய் தருவதாக குதிரைபேரம் பேசப்பட்டது. ஆனால், பாஜகவின் திட்டங்கள் ராஜஸ்தானில் எடுபடாது. காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீண்டாமை கொலை: கோயிலுக்குள் சென்ற பட்டியலின சிறுவனுக்கு நேர்ந்த கதி!