தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, மஜ்லிஸ் என அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பரப்புரையில் பேசிய நிஜாமாபாத் எம்பி தர்மபுரி அரவிந்த், "தெலங்கானாவில் மட்டும் பாஜக ஆட்சியமைத்தால் உங்களையும் (ஓவைசியையும்) உங்கள் சகோதரரையும் என் காலுக்கு கீழ் வைப்பேன். நீங்கள் உங்கள் ஆயுள் முழுவதும் எனக்கு சேவையாற்ற வேண்டும்" என்று பேசினார்.
இவரது இந்தப் பேச்சு பலத்த எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, ஓவைசியும் தெலங்கானாவை ஆளும் டிஆர்எஸ் கட்சியும் இணைந்து, அனுமதியின்றி குடியேறிய ஆயிரக்கணக்கான அகதிகளை வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற வைக்க முயல்வதாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் வரும் டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலுக்கு அமித் ஷா பரப்புரை - தெலங்கானாவை குறிவைக்கும் பாஜக!