டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவத் தலைவரும், பிகார் மாநிலத்தின் பெகுசராய் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருமான கனையா குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”எங்களை முடக்கும் நோக்கத்தில் தேர்தல் பரப்புரைகளில், பாஜக தொண்டர்கள் புகுந்து மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
நான் நேரடியாக பாஜகவை எதிர்கொள்கிறேன். பாஜகவின் பொய் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். என்னை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளரைத் தோற்கடிப்பேன்” என்றார்.
பெகுசராய் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் கிரிராஜ் சிங்கும், காங்., கூட்டணியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் தன்வீர் ஹசானும் போட்டியிடுகின்றனர். இங்கு ஏப்ரல் 29ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.