குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை கடுமையாக விமர்சித்த பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜெயந்த் பாண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மதத்தின் பேரால் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையம் வழக்கு தொடரவில்லை. ஆனால், பாகுபாடு காண்பிக்கப்பட்ட சிறுபான்மையினர்களுக்கு உதவும் சட்டத்தை அது எதிர்க்கிறது.
திபெத்தில் சிறுபாண்மை சமூகம் அடக்குமுறைக்கு உள்ளாகிறது. ஈரானில் அரசியல் கைதிகள் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் இனப்படுகொலை நடைபெறுகிறது. இதற்கெல்லாம் எதிராக வழக்கு தொடரப்படவில்லை. மனிதாபிமான அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்ட சிறுபான்மையினர்களுக்கு குடியுரிமை வழங்குவதை வெட்கமின்றி ஐநா மனித உரிமைகள் ஆணையம் எதிர்க்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காஷ்மில் 21 பேருக்கு கொரோனா ?