புதுச்சேரியில் பாஜக தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சாமிநாதனுக்கு சொந்தமான பள்ளிக்கூடம் ஒன்று தமிழ்நாடு பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ளது. இப்பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இன்று பள்ளி கட்டுமான பணியை பார்வையிடுவதற்காக தனது இல்லத்திலிருந்து கார் மூலம் லாஸ்பேட்டை பகுதியில் இருந்து தமிழ்நாடு பகுதியான கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் அவர் சென்று கொண்டிருந்தபோது, அவரது காரின் பின்புறம் அடையாளம் தெரியாத நபர்கள் கற்களால் எறிந்து தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இதனால் காரின் பின்பகுதி கண்ணாடி முற்றிலும் சேதமடைந்தது. பின்னர் தனது காரின் உடைந்த பகுதியில் கண்ணாடியை மாற்ற கார் கம்பெனிக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்கையில், இதனை அரசியலாக்க வேண்டாம் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையனை வறுத்தெடுத்த தங்கம் தென்னரசு!