நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அதனால் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது. இதனைத் தொடர்ந்து 17ஆவது மக்களவையின் முதல் கூட்டம் தற்போது தொடங்கியது.
இந்த கூட்டத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் திக்கம்கார்க் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வாகியுள்ள வீரேந்திர குமார் தற்காலிக சபாநாயகராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.