உத்தரகண்ட் மாநிலம் நைனிடா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி அஜய் பட், மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பாக மக்களவையில் தனியார் உறுப்பினர் மசோதாவை அறிமுகப்படுத்தவுள்ளார்.
இந்த மசோதா குறித்து தெரிவித்த அவர், "இந்த மசோதா வரும் நாள்களில் மக்கள்தொகை விவரங்கள் தரவுகளுடன் விவாதிக்க பயன்படும். தற்போதைய சூழலில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது.
நாட்டில் ஆபத்தான முறையில் மக்கள்தொகை அதிகரித்துவருகிறது. சாதிகள், மதங்கள் போன்றவை மக்கள்தொகையின் அளவாக இருக்கக்கூடாது. அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும். ஒரே விதமான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்.
மக்கள்தொகையை கட்டுப்படுத்த மக்களவையில் ஒரு மசோதாவைக் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளேன். இதுபோன்ற சிக்கல்கள் முன்னதாகவே ஏற்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அவை ஏற்படப் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பிரதமர் கூட மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து பேசியுள்ளார். கரோனா நெருக்கடி ஏற்படாவிட்டால், இந்த விஷயத்தில் பாஜக சில சாதகமான நடவடிக்கைகளை கண்டிருக்கும். வல்லுநர்களின் கூற்றுப்படி, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், எதிர்காலத்தில் சீனாவின் மக்கள் தொகையை விட நம் நாட்டின் மக்கள்தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.
முன்னதாக, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், நாட்டின் அதிகரித்து வரும் மக்கள் தொகை ஒரு சவாலாக மாறிவிட்டதாகவும், வளர்ந்த நாடுகளுடன் நாம் நிற்க விரும்பினால் அதற்கான கடுமையான சட்டங்கள் தேவை என்று கூறியிருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறை காஷ்மீரில் மாவீரர் தினம் இல்லை